திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்தநகர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அனுமந்தநகரை சேர்ந்த சண்முகவேல் மகன் அன்பரசன்(14). என்பவர் கிணற்றின் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி சிறுவனின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















