மதுரை: சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். மதுரை
மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் முத்தழகு-காந்தி தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 75000.ரூபாய் மதிப்புள்ள பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தனர் .
தினசரி பசுமாட்டை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. மாலையில் பால் கறப்பதற்கு பசுமாட்டை தேடிச் சென்றபோது பசுமாட்டை காணவில்லை. காணாமல் போன பசுமாட்டை தேடிக் கொண்டிருந்த நிலையில் உடனே, கண்ணன் ராஜா என்பவரது தோட்டப் பகுதிகளில் தேடியுள்ளார். அப்போது தோட்டத்திலிருந்த 50 அடி உரை கிணற்றுக்குள் பசுமாடு விழுந்து ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்
சியடைந்தார்.
உடனடியாக, சோழவந்தான் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டைத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம இளைஞர்களும் சேர்ந்து கயிற்றின் மூலமாகக் கட்டிசுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தனது பசு மாடு உயிருடன் மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினருக்கு பசுமாட்டின் உரிமையாளர் கண்ணீருடன் நன்றியை தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி