திண்டுக்கல்: திண்டுக்கல், பொன்னுமாந்துரை புதுப்பட்டி, MGR- நகர் அருகே உள்ள கிணற்றில் ஒச்சம்மாள்(11), தமிழ்ச்செல்வி(10) ஆகிய 2 சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து ஒச்சம்மாள் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோரின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் 2 சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா