விழுப்புரம்: தமிழக அளவில் சுமார் 14 மாவட்டங்களில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கூலி விவசாயிகள் பல ஆயிரக் கணக்கானோரை வேளாண்துறை அதிகாரிகள் அலுவலர்கள் துணையோடு சேர்க்கப்பட்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறை களம் இறங்கியுள்ளது.
விழுப்புரத்தில் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 ஒப்பந்த ஊழியர்களை சி பி சி ஐ டி போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி (தலைமை பொறுப்பு குற்றவியல் நீதிபதி) முத்துகுமரவேல் உத்தரவிட்டார்.
விழுப்புரத்தை அடுத்த செஞ்சி வல்லம் பகுதியில் வேளாண் துறையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய வெங்கடேசன், புஷ்பராஜ், பழனிகுமார், பாரி, மாயவன், பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.