கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்திய கழிவுநீக்கம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் Motor Cycle7, Tata Spacio 3, Tempo Traveller – 2 என மொத்தம் 12 வாகனங்கள் வரும் (09.12.2024)ம் தேதி காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஏல கமிட்டி முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் (07.12.202)4ம் தேதி முதல், ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில், ஆதார் அட்டை நகலுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000/- மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000/- என முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்