சென்னை : சென்னை எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனை (01.04.1928) அன்று காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் உட்பட அவர்களது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவ அதிகாரியுடன் மருந்தகமாக நிறுவப்பட்டது. பின்னர் இந்த மருந்தகம் 1963ம் ஆண்டு 5 மருத்துவ அதிகாரிகளுடன் 15 படுக்கைகள் கொண்ட நகர காவல் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது காவல் மருத்துவமனை மேலும் தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் 50 படுக்கைகள் மற்றும் 10 மருத்துவர்கள் கொண்டு காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரம், தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து அலகுகளிலும் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கு, சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனையில் (Police Hospital) பொது மருத்துவம் (MD), காது, மூக்கு தொண்டை (ENT), கண் (Eye). பல் (Dental), எலும்பு (Ortho) உள்பட பல மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், C.T.Scan, Mammogram, Modern Ultra Sonogram, Modern Digital X-ray, Fully Automated Laboratory Analyzers, Bio Chemistry Analyzer, Electrolyte Analyzer, Hematology Analyzer, Coagulation Analyzer, Colposcopy (for Cancer cervix screening). Diagnostic ENT Endoscopy, Operation Theatre with Modern Medical Equipments, Oxygen Generator with Central Oxygen Supply facily ஆகிய நவீன மருத்துவ உபகரணங்களுடன் காவல் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022-2023ம் நிதியாண்டில், எழும்பூர் காவல் மருத்துவமனையை நவீனபடுத்தும் நோக்கில், காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் எனும் கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்திட அறிவித்து, ரூ.45,50,000/- நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பேரில், “காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள்” மூலம் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று நிறைவடைந்தது. அதன்பேரில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் நேற்று (16.06.2023) மாலை, எழும்பூர் காவல் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள், காவலர் நலன் கணினி மயமாக்கப்பட்ட திட்டத்தை துவக்கி வைத்தார். எழும்பூர் காவல் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, விவரங்கள் காகிதத்தில் எழுதிக் கொடுத்து மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறும் வழக்கம் மாற்றப்பட்டு, அனைத்து காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள், அவர்களது குடும்பத்தினரின், பெயர், வயது, இரத்தவகை உள்ளிட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கென ஒரு ID No. கொடுக்கப்பட்டுள்ளது.
இனி சிகிச்சைக்கு வரும் காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினர், இந்த ஐ.டி.யை கூறி அவர்களது மருத்துவ சிகிச்சை சீட்டு பெற்று, மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறலாம், சிகிச்சை அளிக்கும் மருத்துவர், , நோயின் விவரம், சிகிச்சை விவரம், மருந்து, மாத்திரைகள் விவரம் என அனைத்தையும் அவரது கணினியில் நோயாளிகளின் பக்கத்தில் பதிவு செய்வார்கள். இதனால், சிகிச்சை பெறும் நோயாளிகள் அடுத்து முறை மருத்துவரை சந்திக்கும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட பழைய சிகிச்சை வரலாறுகளை (Case History) கண்காணித்து, அதற்கேற்ப மருத்துவம் அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்படும்இதனால், தகுந்த சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுவதால், நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான தொடர்பு மேம்படுத்தப்படும். உடல் நலனை மென்பொருள் மூலம் கண்காணிக்கும் கணினி மயமாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது சிகிச்சை விவரங்களை ” காவலர் நலன் “ செயலி மூலம் அறிந்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆளிநர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பதிவுகளின் நகல்களையும் பெறலாம். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மருத்துவமனைக்கு நேரடியாக வர இயலாத நோயாளிகள், குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்து, Video Calling மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவரிடமிருந்து மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர் திருமதி.B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.S.இராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), திரு.V.R.சீனிவாசன் (நிர்வாகம்), திரு.கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை), எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமை மருத்துவர் (CMO) திரு.K.மது பிரசாத், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி