தூத்துக்குடி: கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்த அய்யாண்டி பிள்ளை மகன் முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர் (09.09.2024) திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக கோவில் வளாகபகுதியில் உள்ள பொருள் வைக்கும் அறையில் தனது பைகளை வைத்துவிட்டு சென்றவர்கள் பின்னர் அந்தப் பையை தவற விட்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்த பையை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் கண்டெடுத்து (10.09.2024) காலை மேற்படி முத்தையாவை திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட 2 ½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்த பையை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். மேற்படி தவறவிட்ட தங்க நகைகள் இருந்த பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.