கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் -ஓசூர் உட்கோட்டம் – மத்திகிரி காவல் வட்டத்திற்க்குட்ப்பட்ட சிப்காட் மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்., 7 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுதும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, தமிழக காவல் துறை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களின் சுற்றறிக்கை தொடர்பாக மத்திகிரி மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிப்பட இருக்கும் பொதுமக்களுக்கு தமிழக காவல் துறை இயக்குனர் அவர்களின் சுற்றிக்கை குறித்த கட்டுபாடுகளை கவணத்துடன் பரீசிலனை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் மத்திகிரி காவல் காவல் வட்டத்திற்க்குட்ப்பட்ட சிப்காட் மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்., 7 ஆம் தேதி கொண்டாடப்படும் பொதுமக்களுக்கு தமிழக காவல் துறை இயக்குனர் அவர்களின் சுற்றிக்கை குறித்த கட்டுபாடுகளை மற்றும் 10 அடிக்கு மேல் சிலை வைக்க அனுமதி மருத்து ஆணையிடப்படுகிறது. மேலும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, தமிழக காவல் துறை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களின் சுற்றறிக்கையின் கீழ்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்கவும் ஆணையிடப்படுகிறது.
ஆணை: 10 அடிக்கு மேல் சிலை வைக்க அனுமதி மறுத்து ஆணையிடப்படுகிறது.இரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். போலீஸ் உதவி கமிஷனர், ஆர்.டி.ஓ. அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம் ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் வைக்கும் இடத்திற்கு எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. என்ற விபரத்தை கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக் கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அருகில் சிலைகள் வைக்க கூடாது இதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது.
விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது. விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது. கண்காணிப்பு குழு அமைத்து விநாயகர் சிலை வைத்துள்ள இடத்தில் குறைந்தபட்சம் 3 நபர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்.சிலைகள் வைத்துள்ள இடத்தில் தகர கொட்டகைகள் அமைத்து மழை மற்றும் தீ போன்ற காரணத்தினால் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதம் ஜாதி மற்றும் அரசியல் ரீதியாக பேனர் கட்டவுட்கள் கொடிகள் பயன்படுத்தக்கூடாது. சிலை வைத்து கரைக்கும் வரை சிலைக்கு ஏதேனும் சேதாரமே அல்லது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு கண்காணிப்பு குழு அல்லது விழா குழுவினரே பொறுப்பேற்க வேண்டும். என்று காவல் துறையினர் சார்பாக ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்