கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. தங்கதுரை அவர்கள் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கர் அவர்கள், கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முரளி அவர்கள்,காவல் ஆய்வாளர்கள் திரு. வெங்கடேஷ் பிரபு அவர்கள், திரு. செந்தில் குமார் அவர்கள்,திரு. குலசேகரன் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.