இராமநாதபுரம்: திருவாடானை அரச கல்லூரியில் காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் திருவாடானை உட்கோட்ட காவலதுறை சார்பில் இன்று சர்வேதேச போதைப் பெருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் மு. பழனியப்பன் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் ப மணிமேகலை ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு காவல் துறை டி.எஸ்.பி நிரேஷ்பழனிவேல் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் கூறும் போது போதை பொருள் பல்வேறு வகையில் உள்ளது. அதை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர். ஒரு வேலை அப்படி போதைக்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீள்வதற்கு காவல் துறை உதவுகிறது. எனவே அவ்வாறு பாதிக்கப்பட்ட நபரை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஹலோ போலீஸ் எண் 83000 31100 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று பேசினார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாக சார்பு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உறையாற்றினார். இந்நிகழ்வில கல்லூரி விரிவுரையாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவிகளும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். பேராசிரியர் மலர்விழி ரேகா நன்றியுரை கூறினார். அதே போல் சின்ன கீரமங்கலம் தனியார் பள்ளியில் முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய ஓவியம், கட்டுரை போட்டி மாணவ மாணவிகளிடையே நடந்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு டி.எஸ்.பி நிரேஷ் பழனிவேல், பங்கு தந்தை சேவியர் சத்தியமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி அமல ஜெயராணி ஆகியோர் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி