மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் தலைமையில், போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வில், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுதல் ,செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுதல், சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்,
சரக்கு வாகனங்களில் அதிக பாரங்களை ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல்,என்பன உள்ளிட்ட விதிமுறை மீறல் செய்பவர்களுடைய ஓட்டுநர் உரிமம் குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்படும் .
மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தி, இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் மற்றும் உதவி ஆணையாளர் செல்வின்குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக், கணேஷ்ராம், நந்தகுமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தார்ஜூஸ் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி