கன்னியாகுமரி: கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், நமது சமூகமும் உலகமும் இன்று இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்”. காவல் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் தலைப்புகளில் இந்த வருடமும் வரைதல்/ ஓவியம்/ சுவரொட்டி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
Theme 1- போதை பொருட்கள் நமக்கு வேண்டாம்.
Theme 2- பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்
Theme 3- மூத்த குடிமகன்- நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை
Theme 4 சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்
Theme 5 – காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை
1 வகுப்பு முதல் VII ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும்
VIII முதல் XII வகுப்பு வரை ஒரு பிரிவாகவும்
அனைத்து கல்லூரியில் மாணவர்களுக்கு (UG & PG) ஒரு பிரிவாகவும்
(ஒரு மாணவருக்கு அதிகபட்சம் மூன்று Theme)
மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்புகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி 20/01/2023. மாணவர்களின் படைப்புகளை அனுப்பும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரியும்/பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.
நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட மாவட்ட காவல் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நாகர்கோவில்-629001.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு மாணவர்களின் பெறப்பட்ட அனைத்து படைப்புகளையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். முடிவுகள் 25/01/2023 அன்று அறிவிக்கப்படும். மேலும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள்
மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் சந்தேங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம். 9498103903.