மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் தற்போது 20 மதுரை காவலன் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், அவர்கள் இன்னும் தீவிரமாக குற்ற தடுப்பு மற்றும் பிரச்சனைகள் சரி செய்திடும் பொருட்டு, மேலும் 19 இரு சக்கர ரோந்து வாகனங்களை மதுரை மாவட்ட காவல் துறையில் இணைத்துள்ளார்கள்.
மதுரை காவலன் இருசக்கர ரோந்து வாகன பணிக்கு இணைக்கப்பட்ட 19 இருசக்கர வாகனங்களை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. காமினி, இ.கா.ப, அவர்கள் கொடி அசைத்து இன்று துவக்கி வைத்து மதுரை காவலன் பணி சிறப்பாக செய்திட வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள், காவலர்களுக்கு, பொது மக்களின் பிரச்சனைகளை சரி செய்யும் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினர்கள். இவ்விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. விக்னேஷ்வரன், மதுரை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் ஆய்வாளர் திரு. விஜயகாந்த், மோட்டார் வாகனப்பிரிவு, மதுரை மாவட்டம். ஆகியோர் கலந்து கொண்டனர்.