அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர், செந்துறை, இரும்புலிக்குறிச்சி , T.பழூர்,உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலையங்களில் 15.04.2022 இன்று காவல் நிலையம் மற்றும் தனியார் மண்டபங்களில் காவல் அதிகாரிகள் தலைமையில் ” மனு விசாரணை குறைதீர்க்கும் முகாம்” நடைபெற்றது. புகார் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து முடிக்கும் பொருட்டு இந்த முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை மனு விசாரணை குறைதீர் முகாம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும்.