திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிராமபுரங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் 28.02.2022-ம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கிருஷ்ணாபுரம், முத்து மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊர் சார்பாக ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துரையாடலின்போது பொதுமக்களும் காவல் துறையினரும் இணைந்து பாலமாக இருந்து தங்களது பகுதிகளில் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு தங்களது பகுதிகளில் எந்தெந்த சாலைகளில் வேகத்தடைகள், பேரிகாடுகள், முக்கிய சாலை சந்திப்பில் மின்விளக்குகள் அமைக்கலாம் மற்றும் எந்தெந்த இடங்களில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தலாம் என்று கேட்டறிந்தும் மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கூறலாம் எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் பொது மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சமுதாய விழிப்புணர்வுடன் கூடிய நல்லுறவு ஏற்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு,அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன், அவர்கள் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், அவர்கள் சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.