திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர். ராமபாண்டியன் மற்றும் காவலர் கணேஷ், தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாலிபர்களுக்கு அபராதம் விதித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அதி வேகமாக செல்லக்கூடாது என்றும், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்க கூடாது என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் நகருக்குள் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு முறையான ஆவணங்கள் உள்ளதா என பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா