திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் திண்டுக்கலில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக அஞ்சலி ரவுண்டானா அருகே தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது. தணிக்கையின் போது வாகன ஓட்டிகளிடம் வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டது குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் குடிபோதையில் வாகனம் இயக்கக் கூடாது தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தாடிக்கொம்பு காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா