திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர், G.S.அனிதா,(தலைமையிடம்) தலைமையில் அனைத்து வங்கி மேலாளர்களுடன் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, மற்றும் வங்கிகளுக்கு வரும் மூத்த குடிமக்கள் & பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போது நடைபெறும் பல்வேறு நூதனமான மோசடிகளில் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, Fedex கொரியர் என்ற பெயரில் நடைபெறும் மோசடி, ஆன்லைனில் காவல்துறையினர் பேசுவதாக கூறி ஏமாற்றி, கைது செய்திருப்பதாகவும் இதிலிருந்து விடுபட பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவது போன்றவைகள் குறித்து விவாதிக்கப்ட்டது.
மேலும் இது போல மோசடிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிடும் வகையில் துரிதமாக செயல்பட வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உடன் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், சண்முகவடிவு மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்