நெல்லை: தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த-6ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றிய சீனிவாசன் அவர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவர்க்கு பதிலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய திரு.எம்.ராஜராஜன் அவர்கள் மாற்றப்பட்டு, நேற்று மதியம் நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக(சட்டம்-ஒழுங்கு) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் நேற்று மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.