திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), KTC நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ITI, பழையபேட்டை ஆகிய 05 சோதனை சாவடிகளிலும் புதிதாக ANPR (Automatic Number Plate Recognition) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வகை கேமராக்கள் இரவு நேரங்களிலும் அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Rays) மூலம் வாகன எண்கள், நிறம், மற்றும் வாகன வகைகளை துல்லியமாக படம் பிடித்து காட்டும். இதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வாகனங்களில் தப்பிச் செல்லும் நபர்களை அடையாளம் காண பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாநகர எல்கைக்குள் சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து விதமான வாகனங்களும் (24 X 7) காவல்துறையின் முழுநேர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்