திருச்சி: இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் – பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் – SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொதுநலம், எழும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காக, காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) துவக்கப்பட்டது.
இந்த கிளப்பை திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சக்திவேல் தலைமையேற்று துவக்கி வைத்தார். மேலும், ஜமால் முகமது கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.அப்துல் காதர் நிஹால், Pearl Drust நிர்வாக இயக்குநர் முனைவர். திரு.இராமச்சந்திரன், கண்டோன்மெண்ட சரக காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 150 சிறுவர் மற்றும் சிறுமியர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இம்மன்றம் அமைவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் திரு.அருண் மற்றும் காவலர்களுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.