தர்மபுரி: (28.07.2023) சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்கள் திருமதி S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கினார். சேலம் சரகத்தில் மொத்தம் 41 காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் உள்ளன. இதில் 1372 சிறுமி மற்றும் சிறார்கள் பயன் பெறுகின்றனர். 2012 -ம் ஆண்டில் துவங்கப்பட்டு, ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறார் மன்றத்திற்கும் ஆண்டிற்கு ரூ.66000/- வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் மேற்படி மன்றங்களுக்கான முழு பலனை பெற இயலவில்லை. எனவே சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறார் மன்றங்கள் புத்துயிர் பெற்றன. சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள், சிறார் மன்றத்தை புதுபிக்கும் வகையில் வண்ணம் தீட்டி, குடிநீர் மற்றும் மின்சார வசதி, ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்து விளையாட்டுப் பொருட்களும், புத்தங்களையும் வழங்கினார், விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஆங்கிலப் புலமை போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் 41 சிறார் மன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டன.
சுகாதார முகாம் மற்றும் தோல் சிகிச்சை தவிர பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டன. “சிறார் மன்ற செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆதரவாளர்களின் சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்று தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 சிறுமி மற்றும் சிறார் மன்றங்களில் உள்ள 282 மாணவ (163) மற்றும் மாணவியர்களுக்கு (121) விளையாட்டு போட்டிகளின் போது அணிந்து கொள்ள ஏதுவாக டி-சட்டை, பள்ளிக்கு புத்தகம் கொண்டு செல்லும் கைப்பைகள் ஆகியவைகளை திரு. ஞானபிரகாஷ் ஜாக், திரு.கார்த்திக் ரிச்மாண்ட எக்ஸ்போர்ட் நிறுவனம், திருப்பூர், திரு. ஜே.ஏ. தண்டபாணி, ஊர்க்காவல் படை வட்டார படைத் தளபதி, தருமபுரி, திரு. டி.என்.வி. மணிவண்ணன், விஜய் குழும கல்வி நிறுவனங்கள். திரு. ஆர். துரைராஜ். ரங்கா குழுமம், தருமபுரி, திரு. டி. சந்தோஷ், எலைட் க்னிட் எக்ஸ்போர்ட்ஸ், தருமபுரி ஆகியோர் பங்களிப்பில் வழங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பை மேற்கொண்டமைக்காக சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்களை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அவர்கள், பாராட்டினார்.
தருமபுரி காவல் கண்காணிப்பாளர் திரு. த. ஸ்டீபீன் ஜேசுபாதம், எம்.எஸ்.சி. எம்.பி.ஏ அவர்களுக்கும், அவருக்கு இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. சாரணர் இயக்க நிர்வாகிகள் மட்டுமின்றி, உதவி ஆய்வாளர் நிலையிலுள்ள காவல் அலுவலர்களையும் பொறுப்பு அலுவலர்களாக இம்மன்றங்களுக்கு நியமிக்கப்பட்டது. இதன் மூலம் மிகவும் நலிவடைந்த மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழுள்ள சிறார்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல், கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மீது நாட்டத்தை செலுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது. இதனால் சமூக சிந்தனையையும், நல்ல குடிமக்களுக்கான தகுதியையும் குழந்தை பருவத்திலேயே வளர்த்தெடுக்க முன்னுரிமை கொடுத்து சேலம் சரகத்தில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
All reactions:
1515