திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் இரவு நேரத்தில் பொது இடங்களில் தேவையின்றிசுற்றி திரியும் நபர்களை எச்சரிக்கும் நகர காவல் சார்பு ஆய்வாளர். விஜய் அவர்கள் பழனி பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தேவையின்றி பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் நபர்களை கண்டறிந்து அவர்களை விசாரித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். பழனி நகர் காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் அவர்கள் மேலும் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறும் இரவு நேரங்களில் பெண்கள் பேருந்து நிலையத்தில் தங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா