திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பகுதியைச் சேர்ந்த விஜயபிரபாகர் (வ/30) என்பவர் தனது சொந்த வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். விஜயபிரபாகர் கடந்த 04.01.2022 அன்று அதிகாலை ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு, 100 அடி ரோட்டில் உள்ள ஏ.டி.எம் அருகே பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் மேற்படி விஜயபிரபாகரிடமிருந்து 1 செல்போன் மற்றும் ரூ.300ஐ திருடிக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து விஜயபிரபாகர் CMBT காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
CMBT காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல் குழுவினர் உதவியுடன் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெகன் (வ/30) அரும்பாக்கம் என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜெகன் மீது கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
மேலும் கடந்த 01.03.2022 அன்று விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (வ/25) என்பவர் கோயம்பேடு 100 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய வழக்கில் சம்பந்தப்பட்ட 1) லுக்கேஷ் (வ/30) அரும்பாக்கம் 2) சர்புதீன் (வ/19) பாடிகுப்பம் ஆகிய இருவரை CMBT காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்