காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதன்படி சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் அவரின் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளி பிலால் ( 31 ) த/பெ.ஷேக்முகமது, நெ.21 C, மளிகை தெரு, பெரிய காஞ்சிபுரம் என்பவரை சட்டப்பிரிவு 110 குவிமுச – வின் படி ஒரு ஆண்டிற்கு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் 16.11.2021 அன்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் மேற்படி, பிலால் ( 31 ) த/பெ.ஷேக்முகமது நன்னடத்தை பிணையை மீறி 28.03.22 அன்று ஜரினா ( 35 ) க/பெ. உறயத்பாஷா, உறமீத் அவுலியா நகர், காஞ்சிபுரம் என்பவரை கையால் தாக்கியது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். எனவே , மேற்படி நபர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 217 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் . இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்