பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு. ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று 08.04.2022-ம் தேதி எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த சுரேஷ் (45), த/பெ சுப்ரமணியன், 1/176 மாரியம்மன் கோவில் தெரு, பிம்பலூர் பெரம்பலூர் மாவட்டம்.
என்பரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தும் அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 2 லிட்டர் நாட்டு சாராயம் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்திய TN 77 AS 4610 என்ற இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றியும், நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.