திண்டுக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் பெண் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கு பெறுகின்றனர். மாரத்தான் ஓட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் துவங்கி ஆயுதப்படை மைதானத்தில் முடிவடைகிறது.
மேலும் நிகழ்ச்சியில் காவல் உதவி செயலி 181 குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துக் கூறி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா