திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தல் படி மாநகர காவல் துறை (12.01.2026) அன்று சாராள் டக்கர் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு போக்சோ சட்டம், குழந்தை திருமணத் தடுப்பு, போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், இணையவழி குற்றங்கள், சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற அவசர உதவி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
குறிப்பாக அனைவரும் தங்களின் அலைபேசியில் காவல் உதவி (Kaaval Uthavi App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது மூலம் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த செயலியில் உள்ள SOS என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திற்கு காவல் உதவி வந்து சேரும், இந்த செயலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் பயன்படுத்தலாம் எனவும் இது அனைவரது செல்போன்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செயலி என்றும் அதன் பயன்பாட்டினை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உலகம்மாள் (தொழிநுட்பம்) கோகிலா (சிறுவர் உதவி காவல் பிரிவு) இந்திரா (மாநகர மதுவிலக்கு பிரிவு ) மற்றும் உதவி ஆய்வாளர்கள், நித்யா ( சைபர் கிரைம்) சந்திரா (மது விலக்கு அமலாக்க பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















