திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே (28.07.2025) இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர், முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளனர். அப்போது, இரண்டு சிறுவர்கள் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை அரிவாளால் வெட்ட முயன்றதால், தற்காப்புக்காக (17). வயது சிறுவனை உதவி ஆய்வாளர், முருகன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்த சிறுவன் மீது கொலை வழக்கு பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தப்பிச் சென்ற நிலையில் பிடிபட்ட மற்றொரு சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்தில் சிறுவர்கள் மீது தகராறில் ஈடுபட்டது இளைஞரை வெட்டியது, காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்