கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்த அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு நடைபெறும் முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்வர்கள் வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்த அவர், தேர்வு நியாயமானதும் வெளிப்படையானதும் ஆக நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், தேர்வு நேரத்தில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேர்வர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
















