திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுகால்தலை ஆர்ச் அருகே அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்டராஜா (21). என்ற இளைஞர் கையில் வாளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததோடு, அதை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சீவலப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து வைகுண்டராஜாவை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















