திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவலர்களை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அவர்களை மறித்துப் பிடிக்க முயன்றபோது அவர்கள் அரிவாளால் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுத்தமல்லியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருத்தபாண்டி(21). சிவன்பாண்டி மகன் மாரிமுத்து(19). ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















