திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் (14.04.2025) அன்று நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது போதையில் அங்கு வந்த காலிபார்விளை தெருவைச் சேர்ந்த ஹாஜி(22). ரியாஸ்(20). விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த இலியாஸ் (20). ஆகியோர் திருவிழாவுக்கு வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்ததை காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் கண்டித்ததால் மூவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூவர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்