திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம் பெருமாள் கோயில் அருகே இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 5 இளைஞர்களை விசாரணை செய்த போது அந்த இளைஞர்கள் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தது உட்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செங்குளம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வம் (21). வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சிவனுபாண்டியன் (20). நடுத்தெருவைச் சேர்ந்த ராஜா மகன் செல்வம் (23). முருகன் மகன் செல்வம் (23). வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் சிவசெல்வம் (20). ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















