திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் பகுதியில் மனநலம் குன்றிய ஒரு முதியவர் திரிந்து கொண்டிருப்பதை பார்த்த காவல் ஆய்வாளர் நாககுமாரி அவரைப்பற்றி விசாரித்த பொழுது அவர் பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டை சேர்ந்த கதர் ராவ் சிங் (73). என தெரிய வந்தவுடன், உடனடியாக பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது தெரிய வந்தது. இது பற்றி தீவிர விசாரணை நடத்தி அவருடைய குடும்பத்தாரை கண்டுபிடித்து அவருடைய இரு மகன்களிடமும் ஒப்படைத்தார். மேலும் இவ்வழக்கில் திறன் பட விசாரணை செய்த காவல் ஆய்வாளர் நாககுமாரி, மற்றும் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்