திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி இன்றைய இளைய தலைமுறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், விளையட்டுத் துறையில் ஆர்வத்தை உண்டாக்கவும் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் தலைமையிலான காவல்துறையினர் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேரன்மகாதேவி தேரடித் தெருவில் shuttle cock மைதானம் அமைத்து கொடுத்து குழந்தைகளை விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வைத்துள்ளனர். குழந்தைகளை நல்வழிப்படுத்த காவல்துறையினர் எடுக்கும் இந்த சீரிய முயற்சியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்