திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா தலைமையில், திருநெல்வேலி சிபா மருத்துவமனையில், பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஆய்வாளர் அந்தோணி ஜெகதா, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வரும் இந்த காலகட்டத்தில் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாதவர்கள் இடம் பழகும் பொழுது மிகவும் கவனமுடன் தங்களைப் பற்றிய விவரங்களை தராமல் புகைப்படங்கள் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் வந்தால் தங்கள் மருத்துவமனை மேலாளர் இடமோ அல்லது அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு பணியின் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை எடுத்துக் கூறியும், பாதிக்கப்பட்ட பெண்கள் பயப்படாமல் காவல்துறையில் புகார் அளித்தால் ஐ. பி.சி. 376 சட்டத்தின்படி குற்றவாளிக்கு என்ன தண்டனையை வாங்கி தருவோம் என்பதை பற்றியும் மேலும், காவல்துறைக்கு எப்படி புகார் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்