திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, V.வினோத் சாந்தாராம், மற்றும் மாநகர, மாவட்ட, தனிப்படையினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, மாநகரம் மற்றும் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், அச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் அவர்களது குற்ற பிண்ணனி ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பாக, கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சாதி ரீதியாக செயல்படும் நபர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்