திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர, காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகரத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கலந்தாய்வு நடைபெற்றது.
பின்பு காவல் ஆணையர் மாநகரத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளினர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்