திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் (10.03.2026) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம், மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணுதல் மற்றும் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார், (மேற்கு). காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















