மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் முனைவர் மகேஷ்வர் தயாள், இ.கா.ப., அவர்கள் தலைமையிலையில்இ நடந்தது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. லோகநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு மாநகரின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மேலும், மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) ஆகியோர் கலந்து கொண்டு தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவல் நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர். கூட்டத்தின் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தினார்.
















