மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் இவரது மனைவி லட்சுமி ஹரி குமாருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டு அருகே உள்ள, மூன்று அடி நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருவரும் வந்தனர். அப்போது, திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்காக இருந்த போலீசார் மீட்டு, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரிடமும் விசாரித்த பின் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.