திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 17 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். N. மணிவண்ணன் இ.கா.ப.,விடம் அளித்தார்கள். அவர்களது புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்து, உடன் நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















