திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு காவலர் தின விழா ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்களின் தலைமையிலும், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 விழுக்காடு சாலை விபத்துக்களை குறைத்து திறம்பட செயல்பட்ட போக்குவரத்து பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு