தூத்துக்குடி: 2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு நாளை (21.12.2025) நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வஉசி கல்லூரி, கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் மொத்தம் 5146 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி எழுத்து தேர்வை முன்னிட்டு காவல்துறையினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று (20.12.2025) ஏவிஎம் கமலவேல் மஹாலில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேற்படி தேர்வுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்தூக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப, மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குருவெங்கட்ராஜ் ,தூத்துக்குடி (பயிற்சி) காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் மற்றும் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
















