இராமநாதபுரம் : (30.07.2024) காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.S.குமரகுரு அவர்கள் தலைமை வகித்தார்கள். இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS.அவர்கள், கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.S.உத்தமராஜா அவர்கள், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திரு.B.C.கோபிநாத் அவர்கள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.C.மோகன்ராம் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோவிந்தராஜலு அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.காந்தி அவர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கு விசாரணை உதவி இயக்குனர், அரசு வழக்கறிஞர்கள், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுப்பது, விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், காவல்துறை மற்றும் நீதித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.