மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராந்திர கவாத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (06.07.2024) காலை மயிலாடுதுறை உட்கோட்டத்தில் மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், சீர்காழி உட்கோட்டத்தில் சீர்காழி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும், மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாகவும் காவல் அதிகாரிகளுக்கும், காவல் ஆளிநர்களுக்கும் யோகா பயிற்சி நடைபெற்றது.