குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS* அவர்களின் உத்தரவுப்படி வாரம்தோறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் உடல் மற்றும் மன அழுத்தம் குறைந்து, மன வலிமையை அதிகரிப்பதற்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது..
இன்று (23.10.2021) கன்னியாகுமரி மவட்டத்திலுள்ள , நாகர்கோயில், கன்னியாகுமரி, குளச்சல், மற்றும் தக்கலை ஆகிய நான்கு உட்கோட்டங்களிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மன அழுத்தம் போக்கி, புத்துணர்வு பெற யோகா பயிற்சி நடைபெற்றது.