திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன், பணபலன்கள், குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று (21.03.2023), மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 85 ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கோரிக்கைகளுக்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
