திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.C.சைலேந்திர பாபு., இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவினாஷ்குமார்,இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப அவர்கள், முன்னிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நகர்புற பகுதிகளில் குற்றங்களை தடுக்க கூடுதலாக இருசக்கர ரோந்து வாகனங்களை இயக்க தமிழக முதலமைச்சர் அவர்கள், உத்தரவிட்டதன் பேரில் காவல்துறை இயக்குநர் அவர்கள், திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள நகர்புற காவல் நிலையங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருசக்கர ரோந்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தலைமை இயக்குநர் அவர்களால் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அறையை திறந்து வைத்தும், அங்குள்ள போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் புதிதாக கட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் புதிதாக நிலைய வரவேற்பாளர் பணியில் அமர்த்தப்பட்ட 33 பேருக்கு பணிநியமண ஆணைகளை தலைமை இயக்குநர் அவர்கள் வழங்கியும் அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் 11 பேருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.